தற்போதைய செய்திகள்

பேரிடர் காலத்தில் மக்களை காப்பது அம்மாவின் அரசு – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ திட்டவட்டம்

அம்பத்தூர்

பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் அரசாக அம்மாவின் அரசு உள்ளது என்று அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கூறினார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தினந்தோறும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஒவ்வொரு. வார்டாக சென்று வழங்கி வருகிறார்

அந்த வகையில் அம்பத்தூர் தொகுதியில் அடங்கிய சுமார் 300க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை பாடிதிருவல்லீஸ்வரர் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட அர்ச்சகர்கள் அம்மாவின் வழியில் வரும் கழக அரசுக்கும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, கொரோனா என்னும் கொடிய வைரஸிடம் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் காரணமாகத்தான் இன்று உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகிறது.

இருப்பினும் ஒவ்வொரு உயிரும் அரசாங்கத்திற்கு மிக முக்கியம் என்பதை வலியுறுத்தி வகையில் முதலமைச்சரின் துரித செயல்பாட்டை பார்த்தோமேயானால் என்றுமே பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் அரசாக அம்மாவின் அரசு திகழும் என்பது தான் உண்மை. மேலும் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை விரைவில் தமிழகத்தில் இருந்து விரட்ட முடியும். மக்களாகிய நீங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அவைத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி பொருளாளர் கோதண்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி,மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், டன்லப்வேலன், ஹரிகிருஷ்ணன், கே.பாலசுந்தரம், வட்ட செயலாளர், எச்.மோகன். கேபிள் ராஜசேகர், ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.