தற்போதைய செய்திகள்

பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒருநாள் நீடிப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…

சென்னை:-

B.E.,/B.Tech., பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மேலும் ஒருநாள் நீட்டிப்பு என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தொழில் நுட்பக் கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் B.E.,/B.Tech., பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 07.06.2019 முதல் 12.06.2019 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள 46 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

சென்னை தரமணி மைய பலவகை தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தையும் மற்றும் பொதுப் பிரிவு மாணாக்கர்களுக்கான இரு சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களையும், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு உயர்கல்வித்துறை செயலர் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

ஒரு சில மையங்களில் கூடுதலாக ஒரு நாள் அவகாசம் தேவை என்ற மாணாக்கர்களது கோரிக்கையை ஏற்று, மேலும் ஒருநாள் அதாவது 13.06.2019 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகத்தில் உள்ள 46 சேவை மையங்களிலும் நடத்தப்படும் எனவும், அதனை அனைத்து மாணாக்கர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

பொறியியல் மாணாக்கர்கள் சேர்க்கையின்போது, அரசு ஒதுக்கீட்டின்கீழ் ஒற்றைச் சாளர முறையில் சேரும்பொழுது, கல்விக் கட்டணம் மிக குறைவாகும். மேலும், அரசு / அரசு நிதி உதவிபெறும் / சுய நிதி பொறியியல் கல்லுhரிகளில், முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்றவர்கள் அரசு வழங்கும் உதவி தொகையைப் பெறலாம்.

பொறியியல் கல்லுhரி சேர்க்கை சம்மந்தமாக மாணாக்கர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தொலைபேசி எண்கள். 044- 2235 1014,       044- 2235 1015 வாயிலாக உரிய விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 6712 மாணாக்கர்கள் தொலைபேசி மூலமாகவும், 2114 நபர்கள் நேரிடையாகவும் மற்றும் 23,724 நபர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் ஆக மொத்தம் 32550 மாணாக்கர்கள் தங்களது சந்தேககங்களுக்கு உரிய விளக்கம் பெற்று பலன் அடைந்துள்ளார்கள்.