தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்…

கோவை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி நேற்று பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தொடர்பில்லை என்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.