இந்தியா மற்றவை

மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் : பிரதமர் மோடி…

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு மே 19ம் தேதியான நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசிக்கட்ட பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர், இந்த தேர்தல் உலகில் எங்கும் நடக்காத அளவுக்கு சிறப்புடன் இருந்ததாக குறிப்பிட்டார். தேர்தல் காலத்தில் ஐபிஎல் நடைபெற்றதாகவும் ரம்ஜான் கொண்டாடப்பட்டதாகவும் ஈஸ்டர் தினம் அனுசரிக்கபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுவதாக மோடி குறிப்பிட்டார். நீண்ட காலத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பெரும்பான்மை அரசு அமைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.