தற்போதைய செய்திகள்

மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ரூ.168.70 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இப்பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டதின் தொடச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு ரூ.168.70 லட்சம் மதிப்பிலான 3 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இப்பணிகள் ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. மேலும், கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு பணிகள் செய்யப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.