தூத்துக்குடி

மணக்கரையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

கருங்குளம் ஒன்றியம் மணக்கரையில் நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட மணக்கரையில் உள்ள மலை பார்வதி அம்மன் கோயில் கொடை விழாவில் மாட்டு வண்டி மற்றும் குதிரைவண்டி போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டிகளை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்

பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றிபெற்ற வண்டிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கினார். இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். மூன்றாவது பரிசு ரூ.11 ஆயிரத்தை மணக்கரையை சேர்ந்த வெற்றி லாரி சர்வீஸ் உரிமையாளர் திருப்பதி வழங்கினார்.