சிறப்பு செய்திகள்

மதுரை,திண்டுக்கல்,தருமபுரி உட்பட 15 மாவட்டங்களுக்கு 157.19 கோடியில் 102 பள்ளிக் கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

மதுரை,திருச்சி,ஈரோடு,தருமபுரி உட்பட 15 மாவட்டங்களில் ரூ.157.19 கோடியில் 102 பள்ளிக் கட்டடங்கள் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

இது குறித்த அரசு செய்திக் குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் செட்டிமாரம்பட்டி, கிட்டம்பட்டி, தொட்டமஞ்சி, பொம்மதாதனூர், டீ.டி.தின்னூர், பேட்டேப்பள்ளி, கீழ்மத்துhர், அந்தேவனப்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில்  13 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 11 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் காணொலிக் காட்சி (vidio Conferencing) மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 126 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டிமாரம்பட்டி, கிட்டம்பட்டி, தொட்டமஞ்சி, பொம்மதாதனூர், டீ.டி.தின்னூர், பேட்டேப்பள்ளி, கீழ்மத்துhர், அந்தேவனப்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 13 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், உங்கட்டி,சாணமாவு, டி.சூளகுண்டா, பிக்கனப்பள்ளி, உனிசெட்டி, கொப்பகரை, கோவிந்தாபுரம், பூதட்டிக்கொட்டாய் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  திறந்து வைத்தார்கள்.

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 45 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 76 கோடியே 86 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்,

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 49 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 157 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 102 பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர், திரு. இரா.சுடலைக்கண்ணன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.