மதுரை

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…

மதுரை:-

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சரியாக காலை 10.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது.இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர்.

கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இதையடுத்து வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் உள்ள குலாளர் மண்டகப் படியில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தக்கார் கருமுத்துகண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன், மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.