மதுரை

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை வெற்றி பெற செய்ய புறநகர் மாவட்ட இளைஞரணி தீர்மானம்…

மதுரை:-

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை மாபெரும் வெற்றி பெற செய்வோம் என்று மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் நல்லாசியுடன் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் போட்டியிடுகிறார் இந்த தேர்தலில் கழக அரசின் சாதனைகளான மாதந்தோறும் 20 கிலோ அரிசி திட்டம், தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டம், மாணவர்களுக்கு 14 வகை கல்வி உபகரணத் திட்டம், பொங்கல் பரிசு ரூ.1000 திட்டம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனை திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து மதுரை நாடாளுமன்ற தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை மகத்தான வெற்றி பெற வைத்து எதிரிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று இளைஞரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வேட்பாளருக்கு சால்வை அணிவித்து இளைஞரணி சார்பில் வாழ்த்து செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக துணை செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக செயலாளர் முனியாண்டி உட்பட பலர் உடனிருந்தனர்.