மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் கழக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு – வி.வி.ராஜன்செல்லப்பா வாழ்த்து

மதுரை

தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட பயந்து பின் வாங்கி வருகிறது. சில இடங்களில் பிரச்சாரம் செய்யக் கூட தயங்க வைக்கிறது. அனேக இடங்களில் போட்டியின்றி கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கொட்டாம்பட்டி ஊராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட பாலசுப்பிரமணியன், பாண்டாங்குடி பஞ்சாயத்தில் போட்டியிட்ட தேவி லட்சுமி, மதுரை மேற்கு ஒன்றியம் கருவனூர் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தாமரைச்செல்வி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பாவை சந்தித்தனர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்

பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்ததாவது:-

நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் அந்த வெற்றிக்கு முன்னோட்டமாக தற்போது கழக வேட்பாளர்கள் போட்டியின்றி மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பொங்கல் பரிசினை வழங்க எதிர்க்கட்சிகள் தடை போட்டு வருகின்றன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வழங்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. இதற்கெல்லாம் மக்கள் சரியான பதிலடியை தி.மு.க கூட்டணிக்கு தருவார்கள்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் பொன்னுசாமி, வெற்றி செழியன், தக்கார் பாண்டி, மாவட்ட மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.