சிறப்பு செய்திகள்

மதுரை மேலக்கோட்டையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு – கழகக் கொடியை ஏற்றி வைத்தார்…

மதுரை:-

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மேலக்கோட்டையில் கழக கொடியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றினார்.

கன்னியாகுமரியில் பிரதமருடன் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வந்தார். அப்போதுகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ஆகியோர் மலர்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து திருமங்கலம் வழியே கன்னியாகுமரிக்கு காரில் செல்லும் பொழுது மேலக்கோட்டை பகுதியில் கழக அம்மா பேரவை சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 71 அடி உயரமுள்ள கம்பத்தில் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, கழக கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். தாய்மார்கள், சாலையின் இருபுறமும் பூரணகும்ப மரியாதையுடன் முதலமைச்சரை வரவேற்றனர். மேலும் திருப்பரங்குன்றம் கோவிலின் சார்பில் முதலமைச்சருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உசிலம்பட்டி பா.நீதிபதி, மேலூர் பெரியபுள்ளான் (எ)செல்வம், சோழவந்தான் கே.மாணிக்கம், மதுரை தெற்கு தொகுதி எஸ்.எஸ்.சரவணன், மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல். மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச்செயலாளர் பி.அய்யப்பன், புறநகர் மாவட்ட கழக இணைச்செயலாளர் பஞ்சம்மாள், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, பேரூர் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.