தற்போதைய செய்திகள்

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீர்வளம்- மீன்வளத்துறைகளுக்கு தனி அமைச்சகங்கள் அமைக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு…

ராமநாதபுரம்:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீர்வளம், மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தூத்துக்குடி), நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), நெல்லை மாவட்ட கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-

கலாம் பிறந்த மகத்தான இப்புண்ணிய பூமியில் முதலில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். காசி நாடாளுமன்ற உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். அப்துல் கலாம் கண்ட கனவுகளை நிறைவேற்றும் இடத்தில் உள்ளோம். அவரது கனவுகளை நனவாக்கி இந்தியாவை புதிய யுக்தி, புதிய வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்வோம். 2019-ல் இந்தியா 2014 விட மாறுபட்டுள்ளது. வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. காஸ் இணைப்பு மூலம் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 50 கோடி இந்தியர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அறிக்கையில் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மே 23 மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்கும் போது நீர்வளம் மற்றும் மீனவளத்துறைகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மீனவர்கள் வாழ்வை மேம்படுத்த புதிய பாதை உருவாக்கி உள்ளோம். விஞ்ஞானம் மூலம் மீனவர்கள் பல நன்மைகள் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு வட்டார மொழியில் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூக்கையூர், பூம்புகார் துறைமுக பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் சர்வதேச கடல் எல்லையை கடக்க வேண்டி உள்ளது. தூக்கு தண்டனை வரை சென்ற தமிழக மீனவர்கள் 1,900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் மேம்பாடு, அனைவரும் இணைந்த மேம்பாடு குறிக்கோளாக கொண்டுள்ளோம். காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு நாட்டை பற்றிய சிந்தனை இல்லை. மோடியை அகற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் ரத்தத்தில் ஊறி போய் உள்ளது. சர்ஜ்ஜிகள் ஸ்டிரைக் நடவடிக்கையின் போது, திமுக., காங்கிரஸ் கூட்டணி இந்திய ராணுவத்தை குறை கூறினர். காலம் மாறி விட்டது. பயங்கவாத தாக்குதலை அனுமதிக்க முடியாது. வாக்கு வங்கியை நோக்மாக கொண்ட திமுக., காங்கிரஸ் கூட்டணி பேதம் பேசி வருகின்றனர்.

சபரிமலை விவகாரத்தில் நம் நம்பிக்கையை அழிக்க முயல்கின்றனர். பாஜக இருக்கும் வரை அது நடக்காது. காங்கிரஸ் கண்ணோட்டம் வெட்கக்கேடானது. 356-ஐ காங்கிரஸ் பயன்படுத்தி எம் ஜி.ஆரின் அரசை கலைத்தனர். திமுக ஆட்சியையும் கலைத்துள்ளனர். காங்கிரஸ், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாக்களித்தால் குறைவான வளர்ச்சிக்கு வித்திடும். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் அரசியலில் கிரிமினல் நுழைய வாய்ப்பாகும். வலிமை மிக்க தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரியுங்கள். தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.