இந்தியா மற்றவை

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின் கட்கரி…

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வியாழக்கிழமை பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கெளடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் அந்தந்த துறையின் அமைச்சர்கள் பொறுப்பேற்று வருகின்றனர். அந்தவகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.