தற்போதைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் – ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்…

சென்னை:-

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை ஏப்ரல் 18-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 10-ந்தேதி அறிவித்தது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்த விதிகள் அமலுக்கு வரும் என்றும் இந்திய தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன்படி தனியார் இடங்களில் பிரச்சாரம் மற்றும் விளம்பரம் செய்யவோ தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளிடம் கலந்துரையாடினார். ஆனால் இதற்கு எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ராகுல்காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி என்று விளக்கம் கேட்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது அனுமதி அளித்தது எப்படி என்றும் அவர் கேட்டுள்ளார்.