தற்போதைய செய்திகள்

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் அறைகூவல்

அரவக்குறிச்சி

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று கழக நிர்வாகிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கரூர் பரமத்தி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தென்னிலை கிழக்கு, மேற்கு ஊராட்சிகள், புன்னம் சத்திரம், செம்மாண்டம்பாளையம், மாலைக்கோயில், முன்னூர் ஊராட்சி பகுதிகளில் கழக நிர்வாகிகளை சந்தித்து அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பணிகள் குறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கழக நிர்வாகிகளிடம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். அம்மாவின் ஆட்சியில் 67 வகையான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்பட செய்ய மடிகணினி, மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பொங்கல் பரிசாக கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை , பச்சரிசியுடன் ரூ 1000 ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. அம்மா காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகிறது. அம்மா அரசின் சாதனைகளை கழக நிர்வாகிகள் வீடு வீடாக எடுத்து கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய நாம் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

முன்னதாக முன்னூர் ஊராட்சியில் குப்புசாமி தலைமையில் தி.மு.க.விலிருந்து நிர்வாகிகள் விலகி அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெயராஜ், முருகுசேகர், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் கே.எஸ்.நல்லசாமி, ஈரோடு குணசேகரன், ஊராட்சி செயலாளர் கலையரசன், ராம்குட்டி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்