தற்போதைய செய்திகள்

மின்வாரியத்தில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்…

ஈரோடு:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விரைவில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.ஈரோடு அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இத்தகவலை வெளியிட்டார்.

தமிழகத்தில் மின் உற்பத்தி போதுமான அளவு உள்ளது. எதிர்பார்த்த இலக்கை விட அதிகமாகவே மின் உற்பத்தி இருக்கிறது. அதனால் எக்காரணம் கொண்டும் மின்வெட்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை. 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை திறந்திருந்தாலும் அவற்றுக்கு தேவையான அளவு மின்சாரம் விநியோகம் செய்வதற்கு உரிய மின் உற்பத்தி உள்ளது.

ஏற்கனவே மின்வாரியத்தில் 300-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். மதுக்ககைடளை படிப்படியாக மூடும் கொள்கையில் இருந்து அரசு சிறிதும் பின்வாங்க வில்லை. ஏற்கனவே அம்மா அவர்கள் தேர்தலின் போது வாக்குறுதிப்படி மதுக்கடைகள் தொடர்ந்து படிப்படியாக மூடப்படும். கூடிய விரைவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.