விளையாட்டு

முகமது ஷமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

மனைவியை துன்புறுத்திய வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முகமது ஷமியை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவி ஹசின் ஜஹான், கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துதல், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முகமது ஷமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் முகமது ஷமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹசின் ஜஹான், காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் முகமது ஷமி குறித்து கடிதம் எழுதியும் அவருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.