தமிழகம்

முதலமைச்சருடன் டி.ஜி.பி, கமிஷனர் சந்திப்பு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமியை நேற்று டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற கோரியும் சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் ஆகியோர் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக தெரிகிறது.