சேலம்

முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு – திண்டுக்கல் லியோனி மீது கழக கூட்டணியினர் புகார்…

சேலம்:-

முதலமைச்சர் பற்றி கருமந்துறையில் அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது கழகம் மற்றும் கூட்டணி கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் அதனை ேகலியும், கிண்டலும் செய்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் இன்று திமுக வேட்பாளர் கௌதம சிகாமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த திண்டுக்கல் லியோனி பேசினார்.

இதையடுத்து முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அஇஅதிமுக, தேமுதிக, பாஜக வினர் 200-க்கும் மேற்பட்டோர் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.