தமிழகம்

முதல் முறையாக செவிலியர் ஆன திருநங்கை

 

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்  சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது 5224 செவிலியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்களில் அன்பு ரூபி என்ற திருநங்கையும் ஒருவர். இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு செவிலியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து அன்பு ரூபி நமது செய்தியாளர்களிடம் கூறுகையில், திருநங்கைகள் சமூகத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டிய பரிதாப நிலைமையும் ஏற்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு எனக்கு செவிலியர் பணிக்கு நியமன ஆணையை வழங்கி கவுரவித்திருக்கிறது. இதை நான் பெருமையாக கருதுகிறேன்.

திருங்கைகளுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரம் ஆகும் இது. சமூகத்தில் எங்களுக்கு ஒரு அந்தஸ்தை அளித்து பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.