தமிழகம்

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்…

சென்னை:-

சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை இடையேயான புதிய மெட்ரோ வழித்தடத்தில் பயணிகளுக்கான மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.

இதையடுத்து இலவசமாக பொதுமக்கள் நேற்று இரவு வரை பயணிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ள ரயில் நிர்வாகம், பொதுமக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 3வது நாளாக இலவச சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.