விளையாட்டு

மெதுவாக பந்துவீச்சு – ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…

சென்னை:-

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களை வீச ஐ.பி.எல். விதிகளின்படி நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டது. இதனால் மெதுவாக ஓவர் வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஐ.பி.எல். போட்டியில் அபராதம் விதிக்கப்பட்ட 2-வது கேப்டன் ரகானே ஆவார். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாகு ஓவர் வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.