சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்

பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளான தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் இருக்கிறது.