சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு

சேலம்

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது.

காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கரந்ாடக அரசு காவேரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த நான்கு நாளில் 4 அடி உயர்ந்து 118 கன அடியாக அதிகரித்தது.

தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் மழை நீர் காவேரி ஆற்றில் கலக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 16239 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கிழக்கு கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. நேற்று மாலை மேட்டூர் அணை 119 அடியாக உயர்ந்தது. இன்று அல்லது நாளை முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.