மதுரை

மேலூர் இஸ்லாமியர்களை சந்தித்து கழக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு…

மதுரை:-

மேலூரில் உள்ள இஸ்லாமிய மக்களிடத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தீவிர வாக்கு சேகரித்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலூர் ஒன்றியத்தில் புதுசுக்காம்பட்டி, நாவினிபட்டி, கீழையூர், அம்மன் கோவில் பட்டி, கீழவளவு, வச்சம்பட்டி, பாப்பகுடிபட்டி, இளுப்பபட்டி, சுமதிபுரம், செம்மினிப்பட்டி, வடக்குவலையபட்டி, சருகுவலையபட்டி, இடையவாசல், நடுப்பட்டி, வெள்ளளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் மேலூர் சந்தைபேட்டை பகுதியில் வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அம்மா அவர்கள் இஸ்லாமிய மக்கள் மீது மிகுந்த பற்றும் பாசமும், வைத்திருந்தார். அவரது வழியில் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறார்கள். இஸ்லாமிய மக்களின் புனித ஹஜ் பயண திட்டத்திற்காக இது வரை ரூ.6 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஆண்டுதோறும் புனித ரமலான் நோன்பிற்கு 4500 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை ரூ.750 கோடி அளவில் வக்பு வாரிய சொத்துக்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு தோறும் மசூதிகளை புனரமைப்பு செய்ய நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்களுக்கு சைக்கிள், உலமாக்களுக்கு பென்சன் வழங்கிய ஒரே அரசு கழக அரசு தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களின் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கே.தமிழரசன், மேலூர் ஒன்றிய கழக செயலாளர் கே.பொன்னுசாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் வெற்றிச்செழியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் பி.ஜபார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை ெசயலாளர் மேலூர் துரைப்பாண்டி, மேலூர் நகர அம்மா பேரவை செயலாளர் சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.