சேலம்

மேளம்கொட்டி முரசு சின்னத்திற்கு வாக்குசேகரித்த எம்.எல்.ஏ…

சேலம்:-

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆகியோர் மேளம்கொட்டி முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன் ஒட்டப்பட்டி தென்னம்பிள்ளை வீரா கவுண்டனூர், ஓலப்பாடி முத்தகண்டனூர் ஆரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தே.மு.தி.க வேட்பாளர் முரசு சின்னத்திற்கு வீடுவீடாகச் சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி ஆகியோர் முரசு சின்னத்தை மேளம் கொட்டி வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பளித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது தே.மு.தி.க, பா.ம,க பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் சுதீஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி ஆகியோர் மேளம்கொட்டி வாக்கு சேகரித்ததை கண்டு வாக்காளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். மேலும் ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் ஆட்டம்பாட்டத்துடன் வாக்கு சேகரிப்பின் போது வாக்குசேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் அர்ஜுனன், தே.முதிக மாவட்ட செயலாளர் இளங்கோவன், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் குணசேகரன், பா.ம.க மாவட்ட செயலாளர் நடராஜ். ஒன்றிய கழக செயலாளர்கள் பெத்தநாயக்கன்பாளையம் முருகேசன், ஆத்தூர் ரஞ்சித்குமார், மாவட்ட கழக பொருளாளர் ஜெகதீசன் மற்றும் கூட்டணி கட்சியை கட்சியின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.