தற்போதைய செய்திகள்

மோடியால் மட்டுமே நாட்டை வளர்ச்சியடைய செய்ய முடியும் – பூந்தமல்லியில் அமைச்சர் பா.பென்ஜமின் கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரம்…

திருவள்ளூர்:-

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் கா.வைத்திநாதன் ஆதரித்து பூந்தமல்லி தொகுதி ஈக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இரட்டை இலை சின்னத்திற்கே எங்கள் வாக்கு என உறுதி கூறினர்.

இந்த பிரச்சாரத்தின் போது ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மா மக்களால் நான் மக்களுக்காக நான் என வாழ் நாளெல்லாம் தமிழக மக்கள் முன்னேற திட்டங்களை தந்தார். அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து , கந்து வட்டி கொடுமையால் மக்கள் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது. இலவச டிவி வழங்கி கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது. அம்மா ஆட்சியில் 67 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் ரூ. 1000 ரொக்கமாக வழங்கப்பட்டது.

பவானி தொகுதி முழுவதும் தார்சாலைகள் போடப்பட்டுள்ளன. கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வலிமையான பாரதம் அமைய நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். ரூ2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

மகளிருக்கு தாலிக்கு 1 பவுன் தங்கத்துடன் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் வழங்கியது அம்மா அரசு. மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டர்கள் வழங்குவது அம்மா அரசு. அம்மா அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எண்ணற்ற ஏழைகளின் உயிர் காக்கப்பட்டுள்ளது. அம்மா அரசை குறை கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி. கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கழகத்தினர் எடுத்துக் கூற வேண்டும். கழக வேட்பாளர் க.வைத்தியநாதன் மாபெரும் வெற்றி பெற பொதுமக்கள் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களித்து நல்லாதரவை வழங்க வேண்டும்.

நாட்டினுடைய பாதுகாப்பு முக்கியம். நாட்டினுடைய வளர்ச்சியும் முக்கியம். நாட்டினுடைய பாதுகாப்புக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு இந்திய நாட்டை வழிநடத்த கூடியவராக ஒரு வல்லமை படைத்தவராக திறமை இருக்க கூடியவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை படைத்தவராக திறமை படைத்தவராக இருப்பவர் தான் பிரதமர் நரேந்திர மோடி.

மோடி மீண்டும் பிரதமரானால் இந்த உலகமே இந்தியாவை உற்றுப் பார்க்கும் அளவிற்கு இந்திய திருநாட்டை பாதுகாப்புக்கும் வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு செல்வார். அதற்கு நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பு இருக்கும். நாட்டை வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல முடியும். தோழமை கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பாகுபாடின்றி கடுமையாக உழைத்து வெற்றிக்கு பாடுபடுவோம்.

நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். கடந்த முறை இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றிபெற்ற நமது நாடாளுமன்ற வேட்பாளர் இந்த முறை இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளரை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பெருவாரியாக வெற்றிபெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் செவ்வை சம்பத்குமார், இரா.மணிமாறன் புட்லுர் சந்திரசேகர், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, புரட்சிபாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் மற்றும் மாவட்ட செயலாளர் சி.பிகுமார், பா.ஜ.க மாவட்ட செயலாளர் லோகநாதன், முரளி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.