தற்போதைய செய்திகள்

ரவுடிகளின் கூடாரம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கடும் தாக்கு…

சேலம்:-

ரவுடிகளின் கூடாரமாக திகழும் தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து சேலம் 1-வது கோட்டம் ஜாகீர் ரெட்டிப்பட்டியில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் வாக்கு சேகரித்தார். அவருடன் சேலம் மாநகர் மாவட்டக் கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், பா.ம.க மாநில துணைத்தலைவர் மு.கார்த்தி, பாமக துணைப் பொதுச்செயலாளர் இரா.அருள், மாநகர் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநகர செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஜாகீர் ரெட்டிப்பட்டி, டாக்டர்ஸ் காலனி,மாமங்கம் உள்பட பல்வேறு இடங்களில் வீதி,வீதியாக பிரச்சாரம் செய்து கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் பேசியதாவது:-

கழக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் படித்தவர், பண்பாளர். ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர். அப்போது அவர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இவரை எதிர்த்து நிற்கும் தி.மு.க வேட்பாளர் பார்த்திபனோ கத்தியை காட்டியும், துப்பாக்கியை காட்டியும் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் முதலில் பா.ம.க.வில் இருந்தார். அவர் ரவுடி என்பதால் பல கட்சிகளில் இருந்து அவரை வெளியேற்றி விட்டனர். கடைசியாக இப்போது அவர் திமுகவிடம் சென்றுள்ளார்.. திமுக அவரை சேர்த்துக் கொண்டது காரணம் திமுக ரவுடிகளின் கூடாரம். அதற்கு மு.க.ஸ்டாலின் தலைவர். கடந்த 2 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்வதாக வடமாநில பத்திரிகைகளில் அவரை பாராட்டுகின்றன. எனவே இந்த நல்லாட்சி தொடர புரட்சித்தலைவரின் ஆசி பெற்ற இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் பேசினார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது மாநகர கழக பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், பகுதி செயலாளர் தியாகராஜன், மகளிரணி செயலாளர் அசோக்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அசோக்குமார், வட்ட கழக செயலாளர்கள் கேட்மாதேஸ்வரன், கிருஷ்ணன், புல்லட் ராஜேந்திரன், கர்ணன், ராமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.