ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் அம்மாவுக்கு முழு நீள வெண்கலசிலை – ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு முழு நீள வெண்கல சிலை நிறுவப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் உள்ள கீர்த்தி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி படித்தார். அதன் விவரம் வருமாறு:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று அன்னை தமிழகத்திற்காக தவ வாழ்வு மேற்கொண்டு மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை தேசமாக உயர்த்தி காட்டினார் புரட்சித்தலைவி அம்மா. அது மட்டுமல்லாது இந்திய தேசத்தில் மூன்றாவது இயக்கமாக கழகத்தை உருவாக்கி நமது இயக்கத்திற்கு மாபெரும் அழியாப் புகழை பெற்றுத்தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வண்ணம் ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அனைத்து சட்டத்துக்குட்பட்டு உரிய அனுமதியுடன் அம்மாவிற்கு முழுநீள வெண்கல சிலை அமைக்கப்படும் என்பதை புரட்சித்தலைவி அம்மாவின் இந்த 71 பிறந்த நாள் விழாவில் ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றுகிறோம்.

இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.