ஈரோடு

ரூ.15 கோடியில் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு விடுதி புதுப்பிப்பு – சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு தகவல்

ஈரோடு

ரூ. 15 கோடி மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு விடுதி புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகின்றன என சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற அவைக்குழு கூட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சட்ட மன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள்.சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் 8 லிப்ட்டுகள், 4 பிளாக்குகளில் ரூபாய் 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலும், 240 சட்டமன்ற உறுப்பினர் அறைகளுக்கு எம்.எல்.ஏ விடுதிகளுக்கு ரூ.2.74 கோடி மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைக்காட்சி, குளிர் சாதன பெட்டிகள் அமைக்கும் பணியும், ரூ1 கோடியே 5 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் வளாகத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணியும், ரூ.3 கோடியே 75 லட்சத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தும் பணியும், ரூ.4 கோடியே 50 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்கும் பணியும், ரூ.1 கோடி மதிப்பில் சோபா, சாப்பாட்டு மேஜைகள், நாற்காலிகள், டேபிள் புதியதாக அமைக்கும் பணியும் என ரூ.17 கோடி மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு விடுதி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 174 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகம் ரூ. 11 கோடியே 60 லட்சம் மதிப்பில். பொதுமக்கள் வசதிக்கேற்ப கட்டவும், சட்டமன்ற உறுப்பினர்கள் வளாகத்தில் அறைகளுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் வண்ணங்கள் பூச நிதி ஒதுக்க குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், எம்.ஏ.ஆண்டி அம்பலம், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மு.சந்திரபிரபா, ஆர்.எம்.சின்னதம்பி, செ.தங்கபாண்டியன், ப.பலராமன், எஸ்.பவுன்ராஜ், ச.பாண்டி, சிவ.வீ.மெய்யநாதன், வி.ராதாகிருஷ்ணன், க.நா.விஜயகுமார், இரா.ஜெயராமகிருஷ்ணன், செ.ஸ்டாலின் குமார், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் சார்பு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.