தற்போதைய செய்திகள்

ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு கோமதி நெஞ்சார்ந்த நன்றி…

சென்னை:-

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில்  23-வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்துவுக்கு 15 லட்சம் ரூபாயை கழகத்தின் சார்பில் வழங்கி வாழ்த்து ெதரிவித்தனர். நிதி உதவியை பெற்றுக் கொண்ட கோமதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி மாநகர் மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் முடிகண்டம் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சி மனி்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஒன்றிய விவசாயப் பிரிவு பொருளாளர் முதலான பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய ஆரம்ப கால கழக உடன்பிறப்பும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசியுமான மறைந்த என்.மாரிமுத்துவின் மகள் எம்.கோமதி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிறு வயது முதல் தடகள விளையாட்டில் ஆர்வம் மிக்க கோமதியின் தேசிய அளவிலான சாதனையை பாராட்டி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 13.9.2012 அன்று ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்வாக நல நிதியிலிருந்து வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கருணையாலும், அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் கழக அரசின் முயற்சியாலும், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள திருச்சி மாநகர் மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் முடிகண்டம் கிளைக் கழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவை நேரில் வரவழைத்து முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்கது திருக்கரங்களால் 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கி வாழ்த்து கூறியதோடு கோமதியின் சாதனைகள் மென்மேலும் தொடர தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட உதவியை பெற்றுக் கொண்ட கோமதி மாரிமுத்து தான் ஆசிய தடகளப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்வதற்கு காரணமாக இருந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றியை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக் கொண்டார்.