மதுரை

வடமாநில மக்களிடம் ஆதரவு திரட்டிய கழக வேட்பாளர்…

மதுரை:-

வசந்தகாலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக வடமாநிலங்களில் உள்ளோர் ேஹாலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருவார்கள். இந்த ஹோலிபண்டிகையில் தங்களது துன்பம் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என்பது அவர்களது நம்பிக்கை. எனவே ஹோலிபண்டிகையை பல வண்ண கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் மதுரையில் வாழும் குஜராத், ராஜஸ்தான் மாநில மக்கள் வளையக்காரத்தெருவில் ஹோலிப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்த விழாவில் மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளராக போட்டியிடும், வி.வி.ஆர்.ராஜ்சத்யனை பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி ஹோலி பண்டிகையில் பங்கேற்ற போது அங்குள்ள வடமாநிலங்களை சேர்ந்த விஜய்சிங், மோகன்லால், உகம்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு வண்ண கலர் பொடியை அவர் மீது தூவி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் .

அப்போது வேட்பாளர் ராஜ்சத்யன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவை தர வேண்டும், நான் எப்போதும் உங்களின் ஒருவனாக உங்களுக்கு சேவை செய்வேன் என்று கேட்டுக் கொண்டார்.