தற்போதைய செய்திகள்

வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் திருவிழா முன்னேற்பாடு – அதிகாரிகளுடன் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆலோசனை0

திருவண்ணாமலை:-

பிரசித்தி பெற்ற அத்திவரதர் திருவிழாவையொட்டி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை ஒன்றாம் தேதி ஆனந்த சரசு குளத்தில் இருந்து அத்திவரதர் எடுத்து வரப்பட்டு 48 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அத்திவரதர் திருவிழாவிற்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஒரு பங்கு பெற உள்ளதால் முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் முக்கியமாக அத்திவரதர் திருவிழாவிற்கு பொதுமக்கள் தங்குவதற்கு விடுதி, போக்குவரத்து வசதி குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பொதுமக்கள் நீண்டவரிசையில் நிற்பதற்கு அவர்கள் மேற்கூரை அமைப்பதற்கான அவசியம் குறித்தும் தற்காலிக பேருந்து நிலையம், பெரியார் நகர் செவிலிமேடு வையாவூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு தொலைதூர பேருந்துகள் செல்வதற்கான தற்காலிக பேருந்து அமைக்கப்பட உள்ளது. காந்தி சாலை முதல் வரதராஜ பெருமாள் கோவில் வரை முற்றிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

48 நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டுமே போக்குவரத்து மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 108 வாகனம் மருத்துவ சேவை அனைத்து வசதிகளும் உடனுக்குடன் செய்ய வேண்டுமென அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதனையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்ற அமைச்சர் கோவில்களில் நடைபெறும் ஆயத்த பணிகளை பார்வையிட்டு விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.