தற்போதைய செய்திகள்

வரும் அனைத்து தேர்தலிலும் கழகத்தின் வெற்றி தொடரும் – அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு…

விழுப்புரம்:-

சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் கழகத்திற்கு வெற்றி காத்திருக்கிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி உள்ளார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு, முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் ராஜேசேகர், நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேலு பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது:-

கழகம் தலைமையிலான மெகா கூட்டணி தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். அதனை உறுதி செய்யும் விதமாக கட்சியினர் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும். கழக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க.வுக்கும், விழுப்புரம் தொகுதி பா.ம.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விரு தொகுதிகளிலும் கூட்டணி கட்சியினருடன் அ.தி.மு.க.வினர் இணைந்து அயராது பணியாற்றி கழக கூட்டணி வேட்பாளர்களை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அதேபோல, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கழகத்திற்கு வெற்றி காத்திருக்கிறது. அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட பாசறை செயலாளர் சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்களான மணிராஜ், அரசு, ராஜேந்திரன், அய்யப்பன், செண்பகவேல், பழனிசாமி, அருணகிரி, பழனி, ஆப்பிள், ரவி, நகர செயலாளர்களான துரை, சுப்பு, ஷியாம் சுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம்,சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பிற அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.