காஞ்சிபுரம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சரித்திரம் படைப்போம் – காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் சூளுரை…

காஞ்சிபுரம்:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சரித்திரம் படைப்போம் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் சூளுரைத்தார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி கழகம் சார்பில் அம்மா பிறந்தநாளையொட்டி கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் அக்ரி க.நாகராஜன், பிரகாஷ்பாபு, மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநெல்லி தயாளன், பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசியதாவது:-

இந்த இயக்கத்தை வளர்த்து, இந்தியாவிலேயே 3-வது மாபெரும் இயக்கமாக உருவாக்கி, ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிய இதயதெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாட நாம் உறுதிகொள்ள வேண்டும். பல்வேறு கூட்டங்கள் வாயிலாக அம்மாவின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அம்மாவின் கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். “எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம். மாறாக ஏழை எளியவர்களுக்கு உதவி புரியுங்கள்” என்று அம்மா அவர்கள் நமக்கு அன்பு கட்டளையிட்டார். அந்த கட்டளையை நாம் இந்நாள்வரை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.

ஏழை எளியவர்கள், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தையல் இயந்திரம், வேட்டி, சேலை உட்பட பல்வேறு நலஉதவிகள் வழங்கி அம்மாவின் கனவினை நிறைவேற்ற நாம் உறுதிகொள்ள வேண்டும்.அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்திவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் கழக அரசின் சாதனைகளை நாம் மக்களுக்கு எடுத்துரைப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்து அனைத்து இடங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெற்று புதியதோர் சரித்திரம் படைப்பதற்கு நாம் பணியாற்ற தயாராகுவோம்.

நமது வெற்றி உறுதிசெய்யப்பட்டது. ஏனெனில் எங்கு நோக்கினும் கழக அரசின் திட்டங்களை மக்கள் பாராட்டுகிறார்கள். போற்றுகிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை நாம் கொண்டு வந்ததோடு அதனை சிறப்புடன் செயல்படுத்தியுள்ளோம். இதனால்தான் ஸ்டாலின் நம்மீது பொறாமைகொண்டு செய்வதறியாது மேடையில் உளறி வருகிறார். நாம் அனைவரும் அம்மா வகுத்த பாதையில் பயணித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சரித்திரம் படைக்க நாம் உறுதி கொள்வோம்.

இவ்வாறு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசினார்.