தமிழகம்

வறுமையை ஒழிக்க அரசு தீவிர முயற்சி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்…

கோவை:-

வறுமையை ஒழிக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 16.02.2019 அன்று கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கியும் வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு சிறப்பான முறையில் செயல்படுகிறது. ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும். வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்கு தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. தமிழக அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்து தரமான வாழ்விற்கு வழிவகை செய்யப்படுகிறது.

அதன்படி, வேடபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையத்தில், மனோஜ் நகர் மற்றும் அஜ்ஜனூர் ரோடு ஆகிய பகுதிகளில், தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணிக்கும், தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐயுடிஎம் திட்டத்திலிருந்து ரூ.100 லட்சம் மதிப்பில் ராணிராஜலட்சுமி நகரில் வடிகால் மற்றும் 6-வது வார்டு பத்ரகாளியம்மன் கோயில் சாலை, 9-வது வார்டு தீனம்பாளையம் சிம்சன் நகர் மற்றும் 15 வது வார்டு நூலக வீதி ஆகிய பகுதிகளில் வடிகால் மற்றும் 6-வது வார்டு அரிசன காலனி முதல் தாயப்ப நாடார் தோட்டம் வரையில் தார்சாலை அமைக்கும் பணிக்கும், தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐயுடிஎம் திட்டத்திலிருந்து ரூ.100 லட்சம் மதிப்பில் வார்டு எண் 15 நரசீபுரம் மெயின் ரோடு முதல் காளியண்ணன்புதூர் வரை தார்சாலை புதுப்பித்தல் மற்றும் குபேரபுரி மற்றும் யூனியன் ஆபீஸ் அருகில் தார்சாலை மற்றும் வார்டு 13,14-ல் காங்கிரீட் சாலை,

போளுவாம்பட்டி மெயின் ரோடு முதல் மாதம்பட்டி ரோடு மற்றும் கிழக்கு வீதி மயானம் முதல் யூனியன் ஆபீஸ் வரையில் வடிகால் அமைக்கும் பணிக்கும், தொண்டாமுத்தூர் பேரூராட்சி, கெம்பனூர் அண்ணாநகர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.8.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணிக்கும், ரூ.7.00 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் அமைக்கும் பணிக்கும், தொண்டாமுத்தூர் பேரூராட்சி, கெம்பனூர் பகுதியில் ஓ மற்றும் எம் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணிக்கும், ரூ.50 லட்சம் மதிப்பில் ஊரணி மேம்பாடு செய்யும் பணிக்கும், ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாயகூடம் அமைக்கும் பணிக்கும், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கெம்பனூர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சந்தை பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.3,35,50,000 மதிப்பீட்டில் பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கெம்பனூர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பில் பொது விநியோக கட்டடத்தையும், ரூ.6.00 லட்சம் மதிப்பில் கலையரங்கம் என ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சந்திரசேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் துவாகனாத்சிங், செயற்பொறியாளர் குமார், மாவட்ட கழக துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, மாவட்ட கழக பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் டி.எஸ்.ரங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார், கே.கே.கதிரவன், ஜெயபால், ஒன்றிய பொருளாளர் எம்.மோகன்ராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் வேடப்பட்டி கே.கிருஷ்ணராஜ், டி.எம்.சண்முகம், டி.ஆர்.மாணிக்கம் மற்றும் வேணுகானம், தலைமை கழக பேச்சாளர் டி.கே.துரைசாமி, புரட்சித்தம்பி, லட்சுமிகாந்தன், வேடப்பட்டி கருணாகரன், ஆடலரசு, கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜ், செந்தில்குமார், சரவணன், ரகுபதிதேவி, மாயாதேவி, ராம்குமார், சோமு, மலர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.