தற்போதைய செய்திகள்

வாக்கு இயந்திரம் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்:தலைமைத் தேர்தல் அதிகாரி…

சென்னை: –

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் கட்சியின் முகவர்கள் இருக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஆவண அறையில் அதிகாரி நுழைந்தது சர்ச்சையான நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கட்சியின் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.