இந்தியா மற்றவை

வாரணாசியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டி…

புதுடெல்லி

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 182 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா புதுடெல்லியில்  அறிவித்தார். அதன்படி வாரணாசியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். காந்திநகரில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் போட்டியிடுகிறார்கள்.