தமிழகம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு…

சென்னை:-

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காலமானதையடுத்து அத்தொகுதி காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி, புற்றுநோய் காரணமாக காலமானார். இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையானது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.