சிறப்பு செய்திகள்

விஜ­ய­காந்த்­து­டன் முதலமைச்சர் சந்­திப்­பு…

சென்னை

தே.மு.தி.க. ­த­லை­வர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற்றுள்ளது. அ.தி.மு..க. கூட்டணியில் உள்­ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜயகாந்த் இல்லம் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை, பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். அப்போது விஜயகாந்துக்கு முத­ல­மைச்­சர் பொன்னாடை போர்த்தியும், மலர்ச்செண்டு கொடுத்தும் நலம் விசாரித்தார்.

உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, டாக்டர் விஜ­ய­பாஸ்கர், கடம்பூர் ராஜூ, தமி­ழக அரசின் டெல்லி சிறப்பு பிர­தி­நிதி என்.த­ளவாய் சுந்­தரம், தமிழ்­நாடு மத்­திய கூட்­டு­ற­வு வங்கி தலைவர் ஆர்.இ­ளங்­கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முத­ல­மைச்சர் வரு­கிறார் என்­றதும் அந்த பகு­தியில் ஏரா­ள­மான அண்ணா தி.மு.க. தொண்­டர்கள், மாவட்ட செய­லாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலை­மையில் குவிந்­தனர். அ.தி.மு.க. கொடி­களை ஏந்தி வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றார்­.  விஜ­ய­காந்தை சந்­திக்க முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  காலை 11.20 மணிக்கு வந்தார். பின்னர் அங்­கி­ருந்து 11.45 மணிக்கு புறப்­பட்டு சென்றார். சுமார் 20 நிமிட நேரம் இந்த சந்­திப்பு நடந்­த­து.