மற்றவை

விண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் காலியாக உள்ள பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தருமபுரி மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 4 அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூபாய்2500, 5000 ரூபாய்500 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கல்வி தகுதி பொதுபிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். வயது 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

பழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்கள். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்களுக்கு 20 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதர்கள். நியமன இடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஊனமுற்றோருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான தகுதிகள் பொதுபிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மொரப்பூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி ஒன்றியம் குறிஞ்சிநகர் வள்ளலார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிப்பட்டி தூய மரியாள் துவக்கப்பள்ளி, பாலக்கோடு ஒன்றியம் செல்லியம்பட்டி தொடக்கபள்ளிக்கு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. நல்லம்பள்ளி குறிஞ்சிநகர் வள்ளலார், கோவிலூர், விமலபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளி, பாலக்கோடு செல்லியம்பட்டி தொடக்கப்பள்ளியில் சமையல் உதவியாளர் பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.