இந்தியா மற்றவை

விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு ராஜ்நாத்சிங் மரியாதை…

அருணாச்சலில் விமானப்படை விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர் உள்பட 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார்.

கடந்த 3-ம் தேதி இந்திய விமானப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் பயணித்த ஏஎன் 32 ரக போர் விமானம் அருணாயச்சலில் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர்.

மோசமான வானிலையால் 17 நாட்களுக்குப் பின் நேற்று 13 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஹரிஹரனும் ஒருவராவார். இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட அவர்களது உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 13 வீரர்களின் உடல்களும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது