தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…

விழுப்புரம்:-

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வல்லம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றியங்களில், கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் புதியதாக கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன் தலைமையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து வல்லம் ஊராட்சி ஒன்றியம் அணிலாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2015-16ன்கீழ், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2017-18ன்கீழ் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மயிலம் ஊராட்சி ஒன்றியம் அகூர், நடுவனந்தல், டி.கேணிப்பட்டு ஊராட்சியிலும், செஞ்சி ஊராட்சி ஒன்றியம் பரதன்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மயிலம் ஊராட்சியில் ரூ.23.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தையும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

மேலும், கூட்டுறவுத்துறை சார்பாக, ஆலம்பூண்டி, கூட்டேரிப்பட்டு, மேல்சேவூர், மேல்ஒலக்கூர், நடுவனந்தல், நாகந்தூர், பாதிராப்புலியூர் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட 100 மெ.டன் தானியக்கிடங்குகளையும், விழுக்கம், நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடங்களையும், செஞ்சி பேரூராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியினையும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

இவ்விழாக்களில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் பாலகிருஷ்ணன், மலர்விழி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர்.மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை (ஆரணி), சு.இராஜேந்திரன் (விழுப்புரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சக்ரபாணி (வானூர்), டாக்டர்.இரா.மாசிலாமணி (மயிலம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன் (விழுப்புரம்), திண்டிவனம் வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன் ஆவின்தலைவர் பேட்டைமுருகன், மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, கோவிந்தசாமி, ராமதாஸ், முத்தமிழ்செல்வன், சதீஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் அண்ணாதுரை மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.