தற்போதைய செய்திகள்

வீடுதோறும் நலத்திட்டங்கள் ஜொலிக்க செய்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம்…

மதுரை:-

வீடுகள் தோறும் நலத்திட்டங்களை ஜொலிக்க செய்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று சோழவந்தானில் பிரச்சாரம் செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தேனி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், காடுபட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, மண்ணாடிமங்கலம், இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, சல்லக்குளம், பெருமாள்பட்டி, சாணாம்பட்டி, குலசேகரன்கோட்டை, ராமநாயக்கன்பட்டி, தாதம்பட்டி, விராலிபட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ஆண்டிபட்டி, சி.புதூர், சித்தாலங்குடி, திருவாலவாயநல்லூர், நெடுங்குளம், ஆலங்கொட்டராம் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளனர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவால் இயக்க பணிக்காக அடையாளம் காட்டப்பட்டவர் தான் ப.ரவீந்திரநாத்குமார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தேர்தல் களத்தில் சிறப்பாக கழக பணியாற்றி வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பித்தவர் தான் இவர். தற்போது தேனி நாடாளுமன்ற வேட்பாளராக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளார். தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு அம்மா அவர்கள் எடுத்து சென்றார். அதனைத்தொடர்ந்து அம்மாவின் மறைவிற்குப்பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், பாரத பிரதமரை வலியுறுத்தி, ரூ.1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் உயர்தரமான கிசிச்சை பெறுவார்கள்.

உங்கள் நல் ஆசியுடன் அமோக வெற்றி பெற்று ப.ரவீந்திரநாத்குமார் மத்திய அரசின் திட்டங்களை தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு பெற்றுத்தருவார். தற்போது அம்மாவின் திட்டங்கள் இல்லாத வீடே கிடையாது. அதே போல் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் அனைத்து திட்டங்களையும், அனைத்து இல்லங்களுக்கும் நிச்சயம் நாங்கள் கிடைக்க செய்வோம். இன்றைக்கு தேனி நாடாளுமன்ற தொகுதியில் எங்களை எதிர்த்து வெளியூர்காரர் ஒருவரும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் நன்மை கிடையாது, மக்களுக்கும் நன்மை கிடையாது. ஆகவே என்றைக்கும் அம்மா வழியில் ஒரு சிறந்த ஆட்சியை நடத்திவரும் இந்த அரசிற்கு உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், கழக அமைப்புச்செயலாளர் ம.முத்துராமலிங்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், முருகேசன், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர்கணேசன், மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

இந்த தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைகை அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவேன், மேலும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் மத்திய அரசிலிருந்து பல்வேறு திட்டப்பணிகளை நிச்சயம் மேற்கொள்வேன்,

தற்போது எதிர்கட்சியினர் உங்களை குழப்ப வருவார்கள். அவர்கள் பேச்செல்லாம் தண்ணீரில் போடும் கோலத்தை போன்றது. வெறும் வாயாலேயே வடை சுடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. உங்களுக்கான திட்டத்தினை நிச்சயமாக செயல்படுத்துவோம். தேனி நாடாளுமன்ற தொகுதியை ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் பேசினார்.

முன்னதாக மேலமட்டையான் பகுதியில் 5 குழந்தைகளுக்கு ஜெயகீதா, ஜெயச்சந்திரன், ஜெயமதி, ஜெயராமச்சந்திரன், ஜெயஸ்ரீ என்று வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் பெயர் சூட்டினார்.