தற்போதைய செய்திகள்

வீதி வீதியாக நடந்து சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பு – அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரம்…

தருமபுரி:-

தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டை போக்கிய கழகத்திற்கு வாக்களியுங்கள் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரம் செய்து பேசினார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.சம்பத்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேரூராட்சி மற்றும் செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.நகரின் பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று அவர் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். அப்போது இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த தி.மு.க ஆட்சியில் தொடர் மின்வெட்டால் முடங்கிப்போயின. அதனால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானார்கள். கழக ஆட்சியில் மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. மின்உற்பத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்கி வருகிறது. மின்வெட்டே என்பதே இல்லாத சூழ்நிலை உள்ளது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் தமிழகம் இருளில் மூழ்கும். இதை மக்கள் மனதில் வைத்து கழகம் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

வாக்குச் சேகரிப்பின் போது தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பசுபதி, மாவட்ட கழக துணை செயலாளர் செண்பகம் சந்தோஷம், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவன், மாவட்ட பிரதிநிதி பொண்ணுவேலு, நகர பொறுப்பாளர்கள், முன்னாள் நகர செயலாளர் ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பழனி முருகன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் காவிரி, பா.ம.க நகர செயலாளர் அப்துல் சுக்கூர். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் ஐயப்பன். மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், திருவேங்கடம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.