தமிழகம்

வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை:-

தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களான, சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான சிவகங்கை, விருதுநகர் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த ஒரு நாள் வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.