தற்போதைய செய்திகள்

வெம்பாக்கத்தில் ரூ.17லட்சத்தில் புதியதாக பயணிகள் நிழற்குடை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

செய்யாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் கலவை-வெம்பாக்கம் சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினர்.

விழாவில் மாவட்ட கழக இணை செயலாளர் விமலா மகேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு, டி.பி.துரை, திருமூலன், சங்கர், ரமேஷ், ஆரணி வழக்கறிஞர் க.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.