வேலூர்

வேலூரில் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு நினைவு தூணுக்கு ஆட்சியர் அஞ்சலி

வேலூர் :-

வேலூரில் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு, நினைவு தூணுக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆயிரத்து 806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டதன் நினைவாக, சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அதன் நினைவு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்,காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மற்றும் முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.