சிவகங்கை

வைகை பெரியாறு கால்வாயில் இருந்து சிவகங்கை நகருக்கு தண்ணீர் திறப்பு

சிவகங்கை

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை நகரின் தேவைக்காக வைகை பெரியாறு கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சிவகங்கை வந்தடைந்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை நகருக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு வைகை பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படாமல் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் சிவகங்கை திறந்துவிப்படாமல் இருந்தது.

சிவகங்கை மக்களின் பல ஆண்டு கோரிக்கையை கடந்த ஆண்டு கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார். அதன் பலனாக பல கோடி பொருட்செலவில் வைகை பெரியார் கால்வாய் தூர்வாரபடபட்டது. அமைச்சரின் சீரிய முயற்சியால் கால் நூற்றாண்டு கடந்து பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் சிவகங்கை நகரத்துக்கு கடந்த ஆண்டு வந்தது.

இதன் பயனாக சிவகங்கை நகரத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த இருந்த நிலையில் இந்த ஆண்டும் அமைச்சர் ஜி.பாஸ்கரன், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக வைகை பெரியார் ஒன்பதாவது கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து நாயகன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் குடிமராமத்து பணிகள் மூலம் இந்த ஆண்டு கால்வாய்கள் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நிலையில் வைகை பெரியாறு கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கண்மாய்களில் தடங்கலின்றி சென்றடைகின்றது. இதன் மூலம் சிவகங்கை சுற்றியுள்ள உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கோடை சாகுபடிக்கு தயாராக இருக்கின்றனர்.

விவசாயி ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் இன்று நாம் இந்தப் பயனை அடைந்துள்ளோம் என சிவகங்கை விவசாய பெருமக்களும், பொதுமக்களும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கதர் மட்டும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கும், இதற்குப் பெரும் உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கும் பொதுமக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.