இந்தியா மற்றவை

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…

புதுடெல்லி:-

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஷீலா தீட்சித். 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

இந்நிலையில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: – 

டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.